முஸ்ஹஃபில் 111-ஆவது சூரா, 5 வசனங்கள், 603-ஆம் பக்கத்தில் தொடங்குகிறது.
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. அபூ லஹபின் இரு கரங்கள் அழியட்டும். இன்னும், அவனும் அழியட்டும்.
2. அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்கவில்லை. (அல்லாஹ்வின் தண்டனையை அவனை விட்டும் தடுக்கவில்லை.)
3. அவன் ஜுவாலையுடைய நெருப்பில் விரைவில் எரிவான்.
4. இன்னும், (விறகு) சுள்ளிகளைச் சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நரக நெருப்பில் எரிவாள்).
5. அவளுடைய கழுத்தில் ஈச்சம் பாளையின் கயிறுதான் இருக்கும்.
பொருள்களின் மொழிபெயர்ப்பு: Tamil Translation - Omar Sharif, பதிப்பு 1.0.4, QuranEnc.com-இலிருந்து மாற்றமின்றி வெளியிடப்படுகிறது. (QuranEnc.com)
மொழிபெயர்ப்பு குர்ஆனின் பொருள்களை எடுத்துரைக்கிறது; அது குர்ஆன் அல்ல. மேலே உள்ள அரபு மூலமே குர்ஆன்.