தர்தீல் இலச்சினைதர்தீல்நேரலை வானொலி

சூரா அல்இக்லாஸ்: மூலமும் பொருள்களின் மொழிபெயர்ப்பும்

முஸ்ஹஃபில் 112-ஆவது சூரா, 4 வசனங்கள், 604-ஆம் பக்கத்தில் தொடங்குகிறது.

இதன் ஓதுதல்களைக் கேட்கவும்இந்த சூராவை முஸ்ஹஃபில் தஃப்ஸீருடன் படிக்கவும்‹ சூரா அல்மஸத்சூரா அல்பலக் ›

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. (நபியே!) கூறுவீராக! (வணங்கத் தகுதியான இறைவனாகிய) அல்லாஹ் ஒருவன்தான்.

2. அல்லாஹ்தான் நிறைவான தலைவன் (-எல்லா உயர் தகுதிகளையும் உடையவன், எக்குறையுமற்றவன், எல்லாப் படைப்புகளின் தேவைகளையும் நிறைவேற்றுகிறவன், எத்தேவையுமற்றவன், உண்மையானவன், நிறைவானவன்).

3. (அவன் யாரையும்) பெற்றெடுக்கவில்லை. இன்னும், அவன் (யாராலும்) பெற்றெடுக்கப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்கு குழந்தையுமில்லை, தந்தையுமில்லை.)

4. இன்னும், அவனுக்கு நிகராக ஒருவருமில்லை.

பொருள்களின் மொழிபெயர்ப்பு: Tamil Translation - Omar Sharif, பதிப்பு 1.0.4, QuranEnc.com-இலிருந்து மாற்றமின்றி வெளியிடப்படுகிறது. (QuranEnc.com)

மொழிபெயர்ப்பு குர்ஆனின் பொருள்களை எடுத்துரைக்கிறது; அது குர்ஆன் அல்ல. மேலே உள்ள அரபு மூலமே குர்ஆன்.

இதன் ஓதுதல்களைக் கேட்கவும்இந்த சூராவை முஸ்ஹஃபில் தஃப்ஸீருடன் படிக்கவும்‹ சூரா அல்மஸத்சூரா அல்பலக் ›