முஸ்ஹஃபில் 99-ஆவது சூரா, 8 வசனங்கள், 599-ஆம் பக்கத்தில் தொடங்குகிறது.
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. பூமி அதன் நிலநடுக்கத்தால் கடுமையாக குலுக்கப்படும்போது,
2. இன்னும், அந்த பூமி அதன் சுமைகளை எறிந்துவிடும்போது,
3. இன்னும், மனிதன் இதற்கென்ன நேர்ந்தது எனக் கூறுவான்.
4. அந்நாளில் அ(ந்த பூமியான)து தனது செய்திகளை அறிவிக்கும்.
5. அதாவது, உம் இறைவன் அதற்கு (இவ்வாறு) கட்டளையிட்டான் என்று.
6. அந்நாளில் மக்கள் பல பிரிவுகளாக பிரிந்து புறப்பட்டு வருவார்கள். அவர்களின் செயல்களை அவர்கள் காண்பிக்கப்படுவதற்காக.
7. ஆக, யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) நன்மை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார்.
8. இன்னும், யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) தீமை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார்.
பொருள்களின் மொழிபெயர்ப்பு: Tamil Translation - Omar Sharif, பதிப்பு 1.0.4, QuranEnc.com-இலிருந்து மாற்றமின்றி வெளியிடப்படுகிறது. (QuranEnc.com)
மொழிபெயர்ப்பு குர்ஆனின் பொருள்களை எடுத்துரைக்கிறது; அது குர்ஆன் அல்ல. மேலே உள்ள அரபு மூலமே குர்ஆன்.