முஸ்ஹஃபில் 107-ஆவது சூரா, 7 வசனங்கள், 602-ஆம் பக்கத்தில் தொடங்குகிறது.
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. (நபியே! மறுமையில்) கூலி கொடுக்கப்படுவதை பொய்ப்பிப்பவனைப் பார்த்தீரா?
2. ஆக, அவன் அனாதையை விரட்டுகிறான். (அனாதைக்கு அநீதி இழைக்கிறான்.)
3. இன்னும், ஏழைக்கு உணவளிக்க (பிறரைத்) தூண்ட மாட்டான்.
4. ஆக, அந்த தொழுகையாளிகளுக்குக் கேடுதான்,
5. அவர்கள் தங்கள் தொழுகையை (அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதை) விட்டு மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
6. அவர்கள் (நற்காரியங்களை) பிறர் பார்ப்பதற்காக செய்கிறார்கள்.
7. இன்னும், அற்ப பொருளை(யும் பிறருக்கு தானமாக அல்லது இரவலாகக் கொடுக்காது) தடுக்கிறார்கள்.
பொருள்களின் மொழிபெயர்ப்பு: Tamil Translation - Omar Sharif, பதிப்பு 1.0.4, QuranEnc.com-இலிருந்து மாற்றமின்றி வெளியிடப்படுகிறது. (QuranEnc.com)
மொழிபெயர்ப்பு குர்ஆனின் பொருள்களை எடுத்துரைக்கிறது; அது குர்ஆன் அல்ல. மேலே உள்ள அரபு மூலமே குர்ஆன்.