முஸ்ஹஃபில் 108-ஆவது சூரா, 3 வசனங்கள், 602-ஆம் பக்கத்தில் தொடங்குகிறது.
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. (நபியே!) நிச்சயமாக நாம் (சொர்க்கத்தின் நதியாகிய) ‘கவ்ஸர்’ஐ உமக்குக் கொடுத்தோம்.
2. ஆகவே, உம் இறைவனுக்காகத் தொழுவீராக. இன்னும், (அவனுக்காகவே) அறுத்துப் பலியிடுவீராக!
3. நிச்சயமாக உம் பகைவன்தான் நன்மையற்றவன் (-சந்ததியற்றவன்).
பொருள்களின் மொழிபெயர்ப்பு: Tamil Translation - Omar Sharif, பதிப்பு 1.0.4, QuranEnc.com-இலிருந்து மாற்றமின்றி வெளியிடப்படுகிறது. (QuranEnc.com)
மொழிபெயர்ப்பு குர்ஆனின் பொருள்களை எடுத்துரைக்கிறது; அது குர்ஆன் அல்ல. மேலே உள்ள அரபு மூலமே குர்ஆன்.