முஸ்ஹஃபில் 102-ஆவது சூரா, 8 வசனங்கள், 600-ஆம் பக்கத்தில் தொடங்குகிறது.
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. (செல்வம், சொத்து, பதவியில்) அதிகத்தைக் கொண்டு பெருமையடித்தல் (இன்னும், அவற்றை அடைவதில் போட்டிப்போடுவது அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் மறுமையை விட்டும்) உங்களை ஈடுபடுத்தியது.
2. இறுதியாக, நீங்கள் புதைகுழிகளைச் சந்தித்துவிட்டீர்கள்.
3. அவ்வாறல்ல! விரைவில் (உங்கள் முடிவை) அறிவீர்கள்.
4. பிறகு, அவ்வாறல்ல! விரைவில் (உங்கள் முடிவை) அறிவீர்கள்.
5. அவ்வாறல்ல! நீங்கள் (மறுமையை) மிக உறுதியாக அறிந்தால், (அதற்கான தயாரிப்பை மறக்க மாட்டீர்கள்).
6. நிச்சயமாக ஜஹீம் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
7. பிறகு, நிச்சயமாக அதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.
8. பிறகு, அந்நாளில் (இறை) அருட்கொடையைப் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்.
பொருள்களின் மொழிபெயர்ப்பு: Tamil Translation - Omar Sharif, பதிப்பு 1.0.4, QuranEnc.com-இலிருந்து மாற்றமின்றி வெளியிடப்படுகிறது. (QuranEnc.com)
மொழிபெயர்ப்பு குர்ஆனின் பொருள்களை எடுத்துரைக்கிறது; அது குர்ஆன் அல்ல. மேலே உள்ள அரபு மூலமே குர்ஆன்.