முஸ்ஹஃபில் 103-ஆவது சூரா, 3 வசனங்கள், 601-ஆம் பக்கத்தில் தொடங்குகிறது.
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. காலத்தின் மீது சத்தியமாக!
2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில்தான் இருக்கிறான்.
3. எவர்கள் நம்பிக்கைக் கொண்டு; நற்செயல்களைச் செய்து; உண்மையை (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டு, இன்னும் பொறுமையை (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் நஷ்டவாளிகள் இல்லை.)
பொருள்களின் மொழிபெயர்ப்பு: Tamil Translation - Omar Sharif, பதிப்பு 1.0.4, QuranEnc.com-இலிருந்து மாற்றமின்றி வெளியிடப்படுகிறது. (QuranEnc.com)
மொழிபெயர்ப்பு குர்ஆனின் பொருள்களை எடுத்துரைக்கிறது; அது குர்ஆன் அல்ல. மேலே உள்ள அரபு மூலமே குர்ஆன்.