தர்தீல் இலச்சினைதர்தீல்நேரலை வானொலி

சூரா அஷ்ஷரஹ்: மூலமும் பொருள்களின் மொழிபெயர்ப்பும்

முஸ்ஹஃபில் 94-ஆவது சூரா, 8 வசனங்கள், 596-ஆம் பக்கத்தில் தொடங்குகிறது.

இதன் ஓதுதல்களைக் கேட்கவும்இந்த சூராவை முஸ்ஹஃபில் தஃப்ஸீருடன் படிக்கவும்‹ சூரா அழ்ழுஹாசூரா அத்தீன் ›

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. (நபியே!) உம் நெஞ்சத்தை உமக்கு நாம் விரிவாக்கவில்லையா?

2. இன்னும், உம் சுமையை உம்மை விட்டு அகற்றினோம்.

3. அது, உம் முதுகை முறித்தது.

4. இன்னும், உமது நினைவை (உமது நற்பெயரை, உமது சிறப்பை) உமக்கு உயர்த்தினோம்.

5. ஆக, நிச்சயமாக சிரமத்துடன் இலகு இருக்கிறது.

6. நிச்சயமாக சிரமத்துடன் இலகு இருக்கிறது.

7. ஆகவே, நீர் (உமது உலக வேலைகளில் இருந்து, அல்லது மார்க்க காரியங்களில் இருந்து) ஓய்வு பெற்றால் (அல்லாஹ்வை வணங்குவதில் முழுமையாக ஈடுபட்டு) களைப்படைவீராக!

8. இன்னும், உம் இறைவனின் பக்கம் ஆர்வம் கொள்வீராக!

பொருள்களின் மொழிபெயர்ப்பு: Tamil Translation - Omar Sharif, பதிப்பு 1.0.4, QuranEnc.com-இலிருந்து மாற்றமின்றி வெளியிடப்படுகிறது. (QuranEnc.com)

மொழிபெயர்ப்பு குர்ஆனின் பொருள்களை எடுத்துரைக்கிறது; அது குர்ஆன் அல்ல. மேலே உள்ள அரபு மூலமே குர்ஆன்.

இதன் ஓதுதல்களைக் கேட்கவும்இந்த சூராவை முஸ்ஹஃபில் தஃப்ஸீருடன் படிக்கவும்‹ சூரா அழ்ழுஹாசூரா அத்தீன் ›